புத பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கன்னி லக்னக்காரர்கள் புத்திசா-கள்.

பிற கிரகங்கள் அனைத்தும் வேறு வீடுகளில் உச்சம் அடையும். தன் சொந்த வீட்டில் உச்சமடையும் ஒரே கிரகம் புதன் மட்டுமே என்பதால் மற்றவரின் உதவியை விரும்பா மல் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை தாங்களே முயன்று அடையும் பக்குவம் நிறைந்தவர்கள். தங்களின் காரியத்தை யாரிடம் பேசி எப்படி சாதிக்க வேண்டும் என்ற வல்லமை உடையவர்கள். கிடைக்கும் நேரத்தையும், சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்தும் எதார்த்தவாதிகள். பிறரிடம் வேலை செய்தாலும், சொந்தத் தொழில் செய்யவே விரும்புவார்கள். பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலை யைச் செய்வார்கள். தன்னம்பிக்கையும், தைரிய மும் நிறைந்தவர்கள். பிரச்சினைகளை பொறுமையாக இருந்து சமாளிக்கக்கூடிய வர்கள். நல்ல தோற்றப் பொழிவும், ஜன வசீகரமும் கொண்டவர்கள். சாஸ்த்திர ஞானமும் வியாபார தந்திரமும் உள்ளவர்கள். உயர்ந்த லட்சியம் மிக்கவர்கள். இனி தசா புக்திப் பரிகாரங்களைக் காணலாம்.

புதன் தசை

Advertisment

கன்னி லக்னத்திற்கு புதன் லக்னாதி பதி மற்றும் பத்தாம் அதிபதி. புதன் வலுப் பெற்று தசை நடத்தினால் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஜாதகர் பார்க்கும் தொழில்மூலம் புகழ், அந்தஸ்து, கௌவரவம் கிடைக்கப்பெறுவார்.

தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத் திறன், தலைமை தாங்கும் பண்பு அதிகரிக்கும். தொழில் நுட்பம் அறிந்தவர்கள். தன் கையே தனக்கு உதவி என பிறரை நம்பா மல் சுய முயற்சியால் முன்னேறுவார்கள்.

நல்ல புதிய வாய்ப்புகள் தேடிவரும். தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனை மிகைப் படுத்தலாக இருக்கும். சொந்த முயற்சியில் தொழில் செய்பவர்கள். மிகப்பெரிய தொழிலதிபராக தனித்தன்மையுடன் வலம் வருவார்கள். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயம் உண்டாகும். தர்ம ஸ்தாபனம் மற்றும் அறக்கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர் கள். பெற்றவர்களுக்கு கர்மம் செய்யும் பாக்கியம் உண்டாகும். பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான் தனித்து இயங்கி பலருக்கு வேலை தரும் இயல்பில் இருப்பார் கள். மாமியார் மூலம் தொழில் உதவி அல்லது மாமியாரின் தொழிலை ஏற்று நடத்துவர்.

Advertisment

புதன் பலம் குறைந்து தசை நடத்தினால் இவர்களுடைய தொழில் அறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிந்திக்கும் திறன் குறைவு படும். முன்னேற்றம் இருக்காது. உழைப்பு முதலீட் டிற்கு ஏற்ற வருமானத்தை பெற்றுத்தராது. ஜாதகர் சொந்த தொழில் செய்தாலும் தொழில் முன்னேற்றம் பிறரது மரியாதை பெறுவது கடினமானதாக அமையும்.

பரிகாரம்

புதன்கிழமை நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.

ss

சுக்கிர தசை

சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு 2, 9-ஆம் அதிபதி. சுக்கிரன் சுப பலம் பெற்று தசை நடத்தினால் தொட்டது துலங்கும். ஒரு கூட்டத்தை வழிநடத்தும் திறமை இருக்கும். இவர்களுடைய பேச்சிற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். வாக்கு வன்மை, வாக்குபலிதம் மிகுதியாகும்.

Advertisment

ஆன்ம பலம் பெருகி ஆன்மிக ஞானம் அதிகரிக்கும். பேச்சில் தெய்வத்தன்மை வெளிப்படும். அறுசுவை உணவு கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களும் ஜாதகரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள். ஆசிரியர், ஜோதிடம், சட்டம், புரோகிதம், கூட்டுத் தொழில், உணவுத்தொழில், அயல்நாட்டு தொடர்பு போன்ற தொழில்களில் நல்ல தன விருத்தி ஏற்படும்.

தந்தைவழிச் சொத்துக்களை அனுபவிக்கக் கூடிய பாக்கியம் அதிகரிக்கும் .தந்தை, தந்தைவழி உறவினர்கள் இணைந்து குலத் தொழில்மூலம் வருமானம் ஈட்டுவார்கள். வீட்டில் அழகு, ஆடம்பர பொருட்கள் சேர்க்கைக்கூடும்.சுக்கிரனுக்கு புதன் சம்பந்தம் பெற்று தசை நடத்தினால் தர்மகர்மாதிபதி யோகத்தால் மிகமிக உன்னதமான பலனை அடைவார்கள்.

சுக்கிரன் அசுப பலம் பெற்றால் தந்தை, தந்தைவழி உறவு கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

தந்தையால் எவ்வித பலனையையும் எதிர் பார்க்க முடியாது. தந்தை வழிச் சொத்து இருக்காது அல்லது அனுபவிக்கும் பாக்கியம் குறைவு படும்.

சம்பாதிக்கின்ற பணம் தவறான வழிகளில் செலவாகிவிடும்.

வாக்கில் நிதானம் இருக்காது. பொய், பித்தலாட்டம்மூலம் சம்பாதிப்பார்கள். கண் பாதிப்பு இருக்கும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் கலப்பு திருமணம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடை பெறும்.

பரிகாரம்

வசதியற்றவர்களின் திருமணத்திற்கு உதவிசெய்தால் வாழ்க்கை வளமாகும்.

செவ்வாய் தசை

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் 3, 8-ஆம் அதிபதி. அஷ்டமாதிபதி என்பதால் செவ்வாய் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் விபரீத ராஜயோகம். தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, வட்டி, ஷேர் மார்க்கெட், கட்டட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என நூற்றுக்கணக்கான வகையில் தன வரவு உண்டாகும். உபரியான பண சேமிப்பு உருவாகும். இதன்மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது.

உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார் கள். தகவல் தொடர்பு சாதனங்கள்மூலம் பிரபலமடைவார்கள்.

அஷ்டமாதிபதி அசுப வலுப்பெற்றால் தேவையுள்ள அளவிற்கு மட்டுமே பணம் கிடைக்கும். பற்றாக்குறை பட்ஜெட்டில் வாழ்க்கை நகரும். அசுப வழியில் பிரபல மடைவார்கள். உடன்பிறந்தவர்களுடன் பாகப் பிரிவினையில் பிரச்சினை இருக்கும்.

தீராதக் கடன், நோய் பாதிப்பு ஏற்படும். ஆயுள், ஆரோக்கியம் பற்றிய பயம் உண்டாகும். விபத்து, கண்டம், அவமானம், சர்ஜரி, வம்பு, வழக்கு போன்ற பாதிப்புகளால் மனவேதனை ஏற்படும். கர்ம வினைப்படி அவர் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை தன் தசை புக்தியில் மறைவு ஸ்தானம் பரிபூரண மாக தரும்.

பரிகாரம்

புதன்கிழமை செவ்வாய் ஓரையில் லஷ்மி நரசிம்மரை வழிபடவேண்டும்.

குரு தசை

கன்னி லக்னத்திற்கு குரு 4, 7-ஆம் அதிபதி. சுக ஸ்தான அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி.

மாரகாதிபதி, பாதகாதிபதி. எனவே குரு வலுப் பெறக்கூடாது. குரு தசை புக்தி காலங்களில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.

தவறான நட்பில் ஆர்வம் அதிகரிக்கும். மத்திம வயதில் குரு தசை திருமணம், சொத்து சுகம் போன்ற சுப பலன்களை நடத்தும். வயோதிகத்தில் மாரகம் மற்றும் மரணத்திற்கு இணையான கண்டம் உண்டாகலாம். உபய லக்னமான கன்னிக்கு பாதகாதிபதி, கேந்திராதிபதி மற்றும் மாரகாதிபதி குரு. இவர்களுடைய ஜாதகத்தில் பாதகாதி குருவிற்கு அஷ்டமாதிபதி செவ்வாய் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் பாதகம் மிகுதியாக இருக்கும். ஏழில் ஆட்சி பலம்பெறும் குருவும் கன்னியில் நிற்கும் குருவும் தன் தசை புக்தி காலங்களில் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவது இல்லை.

தனுசு, மீனத்தில் ஆட்சி பலம்பெற்றும் கடகத்தில் உச்சம்பெற்றும் குரு தசை நடப்பவர்கள் கவனமாக செயல்பட்டால் பாதகத்தை குறைக்க முடியும்.

பரிகாரம்

புதன்கிழமை யானைக்கு கரும்பு வழங்கவும்.

சனி தசை

கன்னி லக்னத்திற்கு சனி 5, 6-ஆம் அதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. சனி தசை காலங்களில் பூர்வபுண்ணிய பலத்தின்படி இந்த ஜென்மத்தில் நடக்கவேண்டிய அனைத்து சுப பலன்களும் நடக்கும். திருமணம், வீடு வாகனம், நல்ல உத்தியோகம், தொழில் பிள்ளைப் பேறு போன்ற அனைத்து சுப பலன் களும் நடக்கும். சனி தசை காலங்களில் சுய தொழிலில், பிள்ளைகளின் சுப நிகழ்வு மற்றும் முன்னேற்றக் கடனால் வாழ்வா தாரத்தை இழக்கிறார்கள். சுய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை குடும்பத் தில் சுப தசை நடப்பவர்கள் பெயரில் மாற்றி யமைக்க பெரிய பாதிப்பை குறைக்கமுடியும். பொதுவாக சனி தசை மத்திம வயதில் வரும் கன்னி லக்னத்தினர் உத்தியோகத்தில் இருந்தால் அந்தஸ்தான கௌவுரமான பதவியால் நன்மை அடைகிறார்கள். சுய தொழில்புரிபவர்கள் அடையும் துன்பம் சற்று கொடுமையாகவுள்ளது. கௌரவத்தை நிலை நிறுத்த சிறு தொகையில் ஆரம்பமாகும் கடன் கெடும் கடன் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. சனி என்றால் கர்மா. பற்றற்ற வாழ்க்கைக்கு அழைத்துச் செல்பவர். எந்த அசுப தசை புக்தி நடந்தாலும் உயிர் அல்லது பொருள் காரகத்துவத்தால் பாதிப்பு ஏற்படும்.

மிகவும் விரும்பும் உறவுகள் அல்லது பொருள்மேல் உள்ள பற்றை குறைத்தால் பாதிப்பு குறையும்.

பரிகாரம்

புதன்கிழமை சனி ஓரையில் சரபேஸ் வரரை வழிபடவேண்டும்.

சந்திர தசை

கன்னி லக்னத்திற்கு சந்திரன் லாபாதிபதி. சந்திரன் பலம் பெற்று தசை நடத்தினால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் மேம்படும். தொட்ட தெல்லாம் பொன்னாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி தரும்.

ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும். ஆராய்ச்சி கல்வி பட்டம் பெறுவார்கள். இரண்டு திருமணம் நடை பெறும். சித்தப்பா, மூத்த சகோதரர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.

உழைக்காத வருமானம் கிடைக்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர் பான சிந்தனை, சுயமுயற்சி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இவர்களைத் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பு கள் அனைத்தையும் திறமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

சுய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து தசை நடத்தினால் மனதின் வேகத்திற்கு ஏற்ற வாறு இவரது செயல்களில் வேகம் இருக் காது. காரணமற்ற கவலைகளால் வாழ்க் கையை தொலைப்பவர்கள். சிறப்பான பொருளாதார வசதி உண்டு. பொது வாழ்க் கையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும்.

பரிகாரம்

புதன்கிழமை சந்திர மௌலீஸ்வரரை வழிபடவேண்டும்.

சூரிய தசை

சூரியன் கன்னி லக்னத்திற்கு விரயாதிபதி. சூரியன், புதன், சுக்கிரன் முக்கூட்டுக் கிரகங் கள். இவை மூன்றும் நெருக்கமாக இருந்து சுப பலத்துடன் தசை நடத்தினால் வெளிநாட் டுப் பயணம், சுப விரயம், முறையான இல்லற இன்பம் போன்ற சுப பலன்கள் நடக்கும். சூரியன் பலம் குறைந்து தசை நடத்தினால் ஜாதகருக்கு மன விரக்தி, தாழ்வு மனப் பான்மை மிகுதியாகும். என்ன வாழ்க்கை என்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற் றத்திற்கு கடுமையாக போராட நேரும்.

வரவுக்கு மீறி செலவு செய்வார்கள் கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரை விட்டு அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். அடிக்கடி மருத்துவ செலவு உண்டாகும். குறிப்பாக மூட்டு, கை, கால் வலி, கண் சிகிச்சை இருக்கும். சிலர் குழந்தை யாக இருக்கும்போதே காணாமல் போவார் கள். பலர் திருமணம் நடந்தும் இல்லற சன்னி யாசியாகவே வாழ்வார்கள். ஜாதகருக்கு குடும்ப உறவுகளின் அனுசரனை குறையும்.

பரிகாரம்

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் கண் தானத்திற்கு உதவவேண்டும்.ராகு தசை நடப்பவர்கள் தில்லை காளியை வழிபடுவது நல்லது. கேது தசை நடப்பவர்கள் தோரண கணபதியை வழிபடவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406